search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மேலூர் கொள்ளை"

    மேலூர் அருகே லாரியில் இருந்த ரூ.4 லட்சம் மதிப்புள்ள தைலப் பெட்டிகளை கொள்ளையடித்த மர்ம மனிதர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    மேலூர்:

    பிரபல நிறுவனத்தின் தலைவலி தைலப் பெட்டிகளை ஏற்றிக் கொண்டு சென்னையில் இருந்து மதுரைக்கு லாரி புறப்பட்டது.

    இன்று காலை மேலூர் அருகே 4 வழிச்சாலையில் லாரியை நிறுத்திவிட்டு அருகில் உள்ள கடைக்கு டிரைவர் டீ குடிக்க சென்றார்.

    இதனை பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர்கள் கண் இமைக்கும் நேரத்தில் தார்ப்பாயை கிழித்து லாரியில் இருந்த 45 தலைவலி தைல அட்டைப் பெட்டிகளை திருடிக் கொண்டு தப்பினர்.

    சிறிது நேரத்தில் அங்கு வந்த டிரைவர் தார்ப்பாய் கிழிக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    இது குறித்த புகாரின் பேரில் மேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருடு போன தைலத்தின் மதிப்பு ரூ.4 லட்சம் ஆகும்.

    மேலூர் அருகே பட்டப்பகலில் ரேசன் கடை ஊழியர் வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் 30 பவுன் நகையை திருடிக் கொண்டு தப்பினர்.
    மேலூர்:

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள நாவினிப்பட்டியைச் சேர்ந்தவர் சாமிநாதன் (வயது 57). இவர் வெள்ளளூரில் உள்ள கூட்டுறவு சங்க ரேசன் கடையில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.

    சம்பவத்தன்று காலை சாமிநாதன் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் குலதெய்வ கோவிலுக்கு சென்றிருந்தார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட மர்ம நபர்கள் பட்டப்பகலில் வீட்டின் பின்புற கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவில் இருந்த 30 பவுன் நகையை திருடிக் கொண்டு தப்பினர்.

    கோவிலுக்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்பிய சாமிநாதன் கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது நகை திருட்டு போய் இருப்பது தெரிய வந்தது.

    இதுகுறித்த புகாரின் பேரில் மேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜேசு வழக்குப்பதிவு செய்து நகை திருடிய மர்ம நபர்களை தேடி வருகிறார். பட்டப்பகலில் நடந்த இந்த கொள்ளை அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
    மேலூர் அருகே அ.தி.மு.க. நிர்வாகி வீட்டில் 10 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மேலூர்:

    மேலூர் அருகே திருவாதவூரை அடுத்துள்ள அய்யனார்புரத்தைச் சேர்ந்தவர் முத்தாண்டி. விவசாயியான இவர் அந்தப்பகுதி அ.தி.மு.க. கிளை செயலாளராகவும் பணியாற்றி வருகிறார்.

    நேற்று முத்தாண்டி தனது குடும்பத்தினருடன் வீட்டை பூட்டிவிட்டு விவசாய வேலைக்கு சென்று விட்டார்.

    இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவை உடைத்த அவர்கள் அதில் இருந்த 10 பவுன் நகையை திருடிக்கொண்டு தப்பினர்.

    மாலையில் வீடு திரும்பிய முத்தாண்டி, கதவு உடைக்கப்பட்டு நகைகள் திருடப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    இது குறித்த புகாரின் பேரில் மேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    ×